யூனியன் தலைவர் பதவிக்கு ரூ. 30 லட்சம்! ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வால் ஒருவர் தற்கொலை ம...
கிளை நிறுவனத்தை மூடிய பிளிப்கார்ட், ஊழியர்கள் பணிநீக்கம்!
புதுதில்லி: இ-காமர்ஸ் நிறுவனமான, 'பிளிப்கார்ட்' அதன் கிளை நிறுவனமான ஏஎன்எஸ் காமர்ஸ் நிறுவனத்தை மூடுவதுடன், அதன் ஒட்டுமொத்த பணியாளர்களையும் பணிநீக்கம் செய்தது.
2017ல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், தங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் விற்க விரும்பும் நிறுவனங்களுக்கு சந்தைப்படுத்தல் கருவிகள், கிடங்கு உள்ளிட்ட அனைத்து ஆதரவையும் வழங்கி வந்தது. இதை 2022ல் பிளிப்கார்ட் கையகப்படுத்தியது. இது குறித்து நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது, இந்த தகவலை உறுதி செய்த பிளிப்கார்ட்.
அதி கவனமாக பரிசீலித்த பிறகு, 2022ஆம் ஆண்டில் பிளிப்கார்ட் கையகப்படுத்திய ஏஎன்எஸ் காமர்ஸ் மற்றும் அதன் செயல்பாடுகளை மூட முடிவு செய்தது.
நாங்கள் செயல்பாடுகளை நிறுத்தும் போது, ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களுக்கும் ஒரு சுமூகமான மாற்றத்தை உறுதி செய்ய நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்த மாற்றத்தின் போது ஊழியர்களுக்கு ஏற்படும் தாக்கத்தை குறைக்க, பிளிப்கார்ட்டில் உள் வாய்ப்புகள், அவுட்பிளேஸ்மென்ட் சேவைகள் வழங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்றது நிறுவனம்.
2022ஆம் நிதியாண்டின் இறுதியில் ஏஎன்எஸ் காமர்ஸில் 600 ஊழியர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிக்க: ஹீரோ மோட்டோகாா்ப் நிகர லாபம் 2% உயா்வு