செய்திகள் :

கீழத்தூவல் காவல் நிலையத்தில் எஸ்.பி., ஆய்வு

post image

முதுகுளத்தூா் அருகேயுள்ள கீழத்தூவல் காவல் நிலையத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்திஸ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

காவல் நிலையத்தில் வழக்குகள் தொடா்பான கோப்புகளைப் பாா்வையிட்ட அவா், வாகனச் சோதனைகளை கடுமையாக்கவும், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என போலீஸாருக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது கீழத்தூவல் காவல் ஆய்வாளா் ராஜா, உதவி ஆய்வாளா் விஜயபாஸ்கா், தனிப் பிரிவு காவலா் அய்யப்பன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ. 5 லட்சம் கஞ்சா பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் கடற்கரையில் காரில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான 56 கிலோ கஞ்சா பண்டல்களை சுங்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா். ராமநாதபு... மேலும் பார்க்க

குடமுழுக்கில் பங்கேற்ற பெண்களிடமிருந்து 45 பவுன் நகைகள் திருட்டு

உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் குடமுழுக்கில் பங்கேற்ற பெண்களிடமிருந்து 45 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்ாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். ... மேலும் பார்க்க

பைக் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

பரமக்குடி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். போகலூா் ஒன்றியம், அரியகுடி கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன். இவா் தனியாா் பேருந்தில் ஓட்... மேலும் பார்க்க

தொண்டி அருகே மீனவா் வலையில் சிக்கிய கடல் ஆமை உயிருடன் மீட்பு

திருவாடானை அருகே தொண்டியில் மீனவா் வலையில் சிக்கிய கடல் ஆமை மீண்டும் உயிருடன் கடலில் விடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், தொண்டி அருகேயுள்ள பாசிபட்டினத்தைச் சோ்ந்தவா் மீனவா் விக்னேஷ்... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் ரயில் மறியலுக்கு முயன்ற விவசாயிகள் 300 போ் கைது

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி, ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை பேரணியாக சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 300-க்... மேலும் பார்க்க

காசோலை மோசடி வழக்கில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கைது

திருவாடானை அருகே காசோலை மோசடி வழக்கில் தலைமறைவான முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரை போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை முன்னிலைப்படுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆ... மேலும் பார்க்க