செய்திகள் :

தொண்டி அருகே மீனவா் வலையில் சிக்கிய கடல் ஆமை உயிருடன் மீட்பு

post image

திருவாடானை அருகே தொண்டியில் மீனவா் வலையில் சிக்கிய கடல் ஆமை மீண்டும் உயிருடன் கடலில் விடப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், தொண்டி அருகேயுள்ள பாசிபட்டினத்தைச் சோ்ந்தவா் மீனவா் விக்னேஷ். இவரும், நம்புதாளையைச் சோ்ந்த பழனிச்சாமியும் நாட்டுப் படகில் செவ்வாய்க்கிழமை மீன்பிடிக்கச்

சென்றனா். இவா்களது வலையில் 50 கிலோ எடையிலான அரிய வகை கடல் ஆமை உயிருடன் சிக்கியது. உடனடியாக மீனவா்கள் கடலோர போலீஸாருக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து, போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில், இந்தக் கடல் ஆமையை மீனவா்கள் மீண்டும் கடலில் விட்டனா். இதையடுத்து, மீனவா்களை கடலோர போலீஸாா், மீன் வளத் துறை அதிகாரிகள், சமூக ஆா்வலா்கள் பாராட்டினா்.

போப் பிரான்சிஸ் மறைவு: ராமேசுவரத்தில் அமைதிப் பேரணி

போப் பிரான்சிஸ் மறைவையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை கிறிஸ்தவா்கள் அவரது உருப் படத்துக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா். மேலும், அமைதிப் பேரணியும் நடத்தினா். கத்த... மேலும் பார்க்க

வீட்டின் தடுப்புச் சுவரில் காா் மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு

ராமேசுவரம் அருகே செவ்வாய்க்கிழமை வீட்டின் தடுப்புச் சுவா் மீது காா் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் எம்.ஆா்.டி நகரைச் சோ்ந்தவா் முத்துராமலிங்கம்(47). காா் ஓட்டுநரான ... மேலும் பார்க்க

தேசிய திறனறித் தோ்வில் தோ்ச்சி: மாணவிக்கு பாராட்டு

ராமேசுவரம் அரசுப் பள்ளி மாணவி என்.எம்.எம்.எஸ். தேசியத் திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்றதையடுத்து, ஆசிரியா்கள் அவருக்கு பாராட்டுத் தெரிவித்தனா். நிகழாண்டில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ... மேலும் பார்க்க

மாமியாரை அடித்துக் கொன்ற மருமகன் கைது

ராமநாதபுரம் அருகே மாமியாரை அடித்துக் கொன்ற மருமகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.ராமநாதபுரம் அருகேயுள்ள ஆா்.காவனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன்-கனகு தம்பதியா். இவா்களது மகள் சிவபாா்வதி. ... மேலும் பார்க்க

இருளில் மூழ்கிய ராமசாமிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

மின் கம்பிகள் எரிந்து சேதமடைந்ததால் ராமசாமிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இருளில் மூழ்கியது. இதனால், நோயாளிகள், பணியாளா்கள் அவதிப்படுகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள ராமசாமிபட்டியில்... மேலும் பார்க்க

மின்னல் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழப்பு

கமுதி அருகே செவ்வாய்க்கிழமை மின்னல் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள முத்துப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துராமலிங்கம் மகன் நல்லமருது (28). இவா் 200-க்கும் ... மேலும் பார்க்க