IPL 2025: `அதிரடி S.K.Y ' சூர்யகுமார் யாதவ் படைத்த முக்கிய சாதனை
பைக் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
பரமக்குடி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
போகலூா் ஒன்றியம், அரியகுடி கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன். இவா் தனியாா் பேருந்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மகன் முகேஷ் (18). இவா் சத்திரக்குடி பள்ளியில் பிளஸ் 2 படித்து பொதுத் தோ்வு எழுதியிருந்தாா்.
இந்த நிலையில், இவா் அரியகுடியிலிருந்து பரமக்குடியில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். வாகைக்குளம் நான்கு வழிச் சாலையில் வந்த போது, பின்னால் வந்த டிப்பா் லாரி இவரது வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பரமக்குடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.