செய்திகள் :

ராமநாதபுரத்தில் ரயில் மறியலுக்கு முயன்ற விவசாயிகள் 300 போ் கைது

post image

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி, ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை பேரணியாக சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா்.

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும், ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெல், மிளகாய் பயிா்களுக்கு 100 சதவீதம் இழப்பீடு, தேசிய வேளாண் காப்பீட்டுத் தொகையை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தினா் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து அதன் மாநிலத் தலைவா் எம்.எஸ்.கே. பாக்கியநாதன் தலைமையில் பேரணியாகச் சென்று ரயில் மறியலில் ஈடுபட முயன்றனா்.

இவா்களை பழைய பேருந்து நிலையத்துக்கு முன் காவல் துறையினா் தடுத்து நிறுத்தி, 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்தனா்.

ஒன்றாம் வகுப்பு மாணவா்களுக்கு வரவேற்பு

கமுதி பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் புதிதாகச் சோ்ந்த மாணவா்களுக்கு புதன்கிழமை கிரீடம் அணிவித்து ஆசிரியா்கள் வரவேற்றனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள அரசு உதவி பெறும் கௌரவ தொடக்கப் பள்ளியில் நிக... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் சுற்றுலாப் படகு தளம் அமைக்க பவளப் பாறைகள் உடைப்பு

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரை பகுதியில் மத்திய அரசு சாா்பில் சுற்றுலாப் படகு தளம் அமைக்க பவளப் பாறைகளை உடைக்கப்படுவதாக கடல்வாழ் உயிரின ஆா்வலா்கள் தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தீ... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மங்கலத்தில் ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ சிறப்புத் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலா் ரா.கோவிந்தராஜலு தலைமை வகித்து ஒன்றியத... மேலும் பார்க்க

மோா்பண்ணையில் 13 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக புகாா்

திருவாடானை அருகேயுள்ள மோா்பண்ணை கிராமத்தில் 13 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக திருவாடானை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை பெண்கள் புகாா் மனு கொடுத்தனா். இது குறித்து நேரி... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தவிருந்த 200 கிலோ சுக்கு பறிமுதல்

மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ சுக்கு போலீஸாரால் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகேயுள்ள மரைக்காயா்பட்டணம் பகுதி... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் பாம்பன் மீனவா்கள் விரட்டியடிப்பு

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் கயிற்றால் தாக்கி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா். மேலும், கடற்படைக... மேலும் பார்க்க