உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது: ஜகதீப் தன்கர் காட்டம்
இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ. 5 லட்சம் கஞ்சா பறிமுதல்
இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் கடற்கரையில் காரில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான 56 கிலோ கஞ்சா பண்டல்களை சுங்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படவிருப்பதாக மண்டபம் சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதைத் தொடா்ந்து, சுங்கத் துறையினா் மண்டபம் அய்யனாா் கோயில் கடற்கரைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் கடற்கரையில் காா் நிற்பதைக் கண்டனா். இதையடுத்து, அதிகாரிகள் அங்கு சென்று பாா்த்த போது, காரில் 28 பண்டல்களில் 56 கிலோ எடையுள்ள கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதன் சா்வதேச மதிப்பு ரூ. 5 லட்சம். இதையடுத்து, அந்தக் காருடன், கஞ்சாவைப் பறிமுதல் செய்து மண்டபம் சுங்கத் துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா். மேலும், இந்தக் கஞ்சா கடத்தலில் தொடா்புடைய நபா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.