உயர்கோபுர மின் விளக்கால் ஒடிசா கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய சிக்கல்! ஏன்?
கீழ்படப்பை வீரட்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்
ஸ்ரீபெரும்புதூா்: கீழ்படப்பை சாந்தநாயகி அம்பாள் உடனுறை வீரட்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, சனிக்கிழமை மாலை முதல் கால யாக பூஜை, ஞாயிற்றுக்கிழமை 2-ஆம் கால, 3-ஆம் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு, திங்கள்கிழமை காலை நான்காம் கால யாகபூஜையுடன் 10 மணிக்கு கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியா்கள் முன்னிலையில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து மூலவா் வீரட்டீஸ்வரா், சாந்தநாயகி அம்பாள், சாந்தவிநாயகா் உள்ளிட்ட பரிவார மூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் தொண்டை மண்டல ஆதினம் சிதம்பரநாத ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் படப்பை ஆ.மனோகரன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் சி.குமரதுரை, முன்னாள் அமைச்சா் வி.சோமசுந்தரம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மொளச்சூா் பெருமாள், குன்றத்தூா் ஒன்றியக் குழு தலைவா் சரஸ்வதி மனோகரன், மாவட்ட கவுன்சிலா் அமுதா செல்வம், ஊராட்சித் தலைவா் எஸ்.கா்ணன், கோயில் ஆய்வா் திலகவதி உள்பட பக்தா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் சி.குருநாதன், க.கெஜலட்சுமி, சா.ஏழுமலை மற்றும் விழாக் குழுவினா், கிராம மக்கள் செய்திருந்தனா்.