திமுக எதிர்ப்பை விஜய் தீவிரப்படுத்த வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள்
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 லேசான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிமை காலை 6:41 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 2.6ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கம் தோலாவிராவின் கிழக்கு-தென்கிழக்கில் 24 கி.மீ தொலைவில் மையமாக கொண்டிருந்தது.
அதைத்தொடர்ந்து, மதியம் 12:41 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் வலுவான 3.1 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் பச்சாவ்விலிருந்து 12 கி.மீ வடக்கு-வடகிழக்கில் மையம்கொண்டிருந்தது.
மேகாலயாவில் லேசான நில அதிர்வு
அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது பொருள் சேதமோ எதுவும் ஏற்படவில்லை என்று மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். கட்ச் பகுதி மிகவும் அதிக ஆபத்துள்ள நில அதிர்வு மண்டலத்தில் உள்ளது.
இப்பகுதியில் அடிக்கடி சிறிய நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.