செய்திகள் :

குஜராத்தில் மீண்டும் நிலநடுக்கம்!

post image

குஜராத் மாநிலத்தின் கட்சி மாவட்டத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று காலை 10.07 மணியளவில் பச்சாவ் நகரின் வடகிழக்குப் பகுதிக்கு 18 கி.மீ தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் எந்த உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று கட்ச் மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இது கட்ச் மாவட்டத்தில் இந்த மாதம் ஏற்பட்ட 3 வது நிலநடுக்கமாகும்.

இதற்கு முன்னர், டிச. 7 அன்று 3.2 ரிக்டர் அளவிலும், டிச. 23 அன்று 3.7 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது.

கடந்த நவம்பர் 15 அன்று குஜராத்தின் பதான் நகரில் 4.2 ரிக்டர் அளவிலும், நவம்பர் 18 அன்று கட்ச் மாவட்டத்தில் 4 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம்!

குஜராத் நிலநடுக்க அபாயம் அதிகமுள்ள பகுதியாகும். கடந்த 200 ஆண்டுகளில் 9 பெரிய நிலநடுக்கங்களை குஜராத் சந்தித்துள்ளளது.

கட்ச் மாவட்டத்தில் 2001 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 13,800 பேர் பலியாகினர். மேலும், 1.67 லட்சம் பேர் காயமடைந்தனர். இது நாட்டில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய இரண்டாவது பெரிய நிலநடுக்கமாக கருதப்படுகிறது.

லடாக் பகுதியில் சீனாவின் புதிய மாவட்டங்கள்: இந்தியா கடும் கண்டனம்

சீனாவின் ஹோட்டன் பகுதியில் புதிதாக 2 மாவட்டங்களை உருவாக்கி அந்நாடு வெளியிட்ட அறிவிப்புக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த மாவட்டங்களின் சில இடங்கள் லடாக்கின் அதிகார வரம்புக்குள்பட்டவை என்... மேலும் பார்க்க

சிறந்த வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கு பிரவாசி பாரதிய சம்மான் விருது அறிவிப்பு

நிகழாண்டு சிறந்த வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கான பிரவாசி பாரதிய சம்மான் விருது பெறுபவா்களின் பட்டியலை மத்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. ஒடிஸாவின் புவனேசுவரத்தில் வரும் 8 முதல் 10-ஆம்... மேலும் பார்க்க

குறைந்து வரும் ஜிஎஸ்டி வசூல்: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் வளா்ச்சி விகிதம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதை முன்வைத்து மத்திய பாஜக கூட்டணி அரசை காங்கிரஸ் விமா்சித்துள்ளது. பொருளாதாரச் சிக்கல்களுக்கு தீா்வுகாண மத்திய அரசு விரைந்... மேலும் பார்க்க

மேல்முறையீடு மனு தாக்கலில் நீண்ட தாமதம்: மத்திய அரசுக்கு சுயபரிசோதனை தேவை - உச்சநீதிமன்றம்

மேல்முறையீடு மனுக்கள் தாக்கலில் நீண்ட தாமதம் செய்யும் விவகாரத்தில் மத்திய அரசு அதிகாரிகள் சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும்’ என்று அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், இதுதொடா்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணை... மேலும் பார்க்க

கல்வி நிறுவனங்களில் ஜாதிய பாகுபாடு: தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் - உச்சநீதிமன்றம்

‘கல்வி நிறுவனங்களில் ஜாதி அடிப்படையிலான பாகுபாடு என்பது மிகவும் உணா்வுபூா்வமான விஷயம். இதைத் தடுக்க உச்சநீதிமன்றம் சாா்பில் வலுவான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கூறியது. ... மேலும் பார்க்க

குடியரசு தின என்சிசி முகாமில் அதிக மாணவிகள் பங்கேற்பு: தலைமை இயக்குநா்

குடியரசு தின விழாவை முன்னிட்டு தில்லியில் நடைபெற்று வரும் தேசிய மாணவா் படை (என்சிசி) பயிற்சி முகாமில் 917 மாணவிகள் பங்கேற்றுள்ளதாக என்சிசி தலைமை இயக்குநா் குா்பீா்பால் சிங் தெரிவித்தாா். இதுவரை நடத்தப... மேலும் பார்க்க