ஆவின் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தல்
"குஜராத் முதல்வராகும் வரை மோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இல்லை" - தெலங்கானா CM கூறுவதென்ன?
பிரதமர் மோடி குஜராத் முதல்வராவதற்கு முன்பு வரை பிற்படுத்தப்பட்ட வகுப்பில் (Backward Class) இல்லையென்றும், முதல்வரான பிறகு தன்னுடைய சமூகத்தை அந்தப் பட்டியலில் சேர்த்துக்கொண்டு தற்போது அவர்களுக்கெதிரான மனநிலையில் இருக்கிறாரென்றும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியிருப்பது, பா.ஜ.க தரப்பில் எதிர்வினையைத் தூண்டியிருக்கிறது.
ஐதராபாத்தில் நிகழ்ச்சியொன்றில் பேசிய ரேவந்த் ரெட்டி, ``பிரதமர் மோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல. அவர் சட்டபூர்வமாக அந்தப் பட்டியலுக்கு மாற்றப்பட்டவர். 2001-ல் முதல்வராவதற்கு முன் அவருடைய சமூகம் உயர் வகுப்பில் இருந்தது. முதல்வரான பிறகு அதைப் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இணைத்தார்.

பிறப்பால் அவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரல்ல. பெயருக்கு மட்டும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். அவரின் மனநிலை பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கு எதிரானது." என்று கூறினார்.
ரேவந்த் ரெட்டியின் இத்தகைய பேச்சுக்கு பாஜக தரப்பிலிருந்து கடுமையான விமர்சனங்கள் அவர் மீது விழுந்தன. அதில், தெலங்கானா பா.ஜ.க தலைவர் கிஷன் ரெட்டி, ``தெலங்கானா மட்டுமல்லாது நாடு முழுவதும் மக்கள் ஆதரவைக் காங்கிரஸ் இழந்து வருவதால், ரேவந்த் ரெட்டி பொறுமையிழந்து இது போன்ற கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்." என்று விமர்சித்தார்.
அதேபோல், மத்திய உள்துறை இணையமைச்சர் பாண்டி சஞ்சய் குமார், ``பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்குவதாகக் காங்கிரஸ் அளித்த வாக்குறுதியிலிருந்து கவனத்தைத் திசை திருப்ப, இவ்வாறு பிரதமரின் சாதியைப் பற்றி ரேவந்த் ரெடி பேசுகிறார். 1994-ல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, மோடி ஓபிசி பட்டியலில் இருந்தார். ராகுல் காந்திக்கு தான் என்ன சாதி என்ன மதம் என்று தெரியுமா அல்லது உங்களுக்குத் தெரியுமா?" என்று சாடினார்.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play