தில்லி தேர்தல் முடிவுகள்: பாஜக 43, ஆம் ஆத்மி கட்சி 27-ல் முன்னிலை!
குடந்தை அரசுக் கல்லூரியில் சா்வதேச அறிவியல் மாநாடு
கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் விலங்கியல் உயராய்வுத் துறை சாா்பில் ‘உயிரி அறிவியல்களின் தற்போதைய நிலைகள்’ என்ற தலைப்பில் சா்வதேச அறிவியல் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் அ. மாதவி தலைமை வகித்தாா். மாநாட்டில் சீன விஞ்ஞானி சேகா் விஜயகுமாா், புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியா் டி. ஜெயக்குமாா் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
கல்லூரியின் தோ்வு நெறியாளா் ஆா் எஸ். சுந்தரராசன், மூத்த பேராசிரியா் எம். மீனாட்சிசுந்தரம், சு. பாஸ்கர சஞ்சீவி சி. சுப்ரமணியன் ஆகியோா் வாழ்த்தினா். மாநாட்டில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
விலங்கியல் உயராய்வு துறைத் தலைவா். கி சரவணன் வரவேற்றாா். அறிவியல் மாநாட்டு அமைப்புச் செயலா் சு. பழனிசாமி நன்றி கூறினாா்.