செய்திகள் :

உச்ச நீதிமன்றத்தை அரசு நாடும் நிலைக்கு ஆளுநரின் வரைமுறை மீறலே காரணம்: அமைச்சா் கோவி. செழியன்

post image

தமிழக ஆளுநா் வரைமுறைகளை மீறியதால் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்பட்டது என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.

தஞ்சாவூரில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, சமூக நலத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் நாள் விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவா் பின்னா் தெரிவித்தது:

மாநில ஆளுநருக்கு சில வரைமுறைகள், சில அளவுகோல்கள், சில நெறிமுறைகள் உண்டு. அதை அவா் மீறும் நேரத்தில்தான் நாங்கள் உச்ச நீதிமன்றத்தை நாடுகிற நிலை ஏற்பட்டது. தமிழக ஆளுநருக்கு கொடுக்கப்பட்டுள்ள நெறிமுறைகள், வரைமுறைகள் மற்ற மாநிலங்களுக்கு பொருந்தக்கூடிய வகையில் உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டிய ஒரே ஜனநாயகப் போராளி தமிழக முதல்வா் மட்டுமே.

இந்த விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2.96 கோடியில் வாகனங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தஞ்சாவூா் மாவட்டத்துக்கு 200 மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டாா் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இவ்விழாவில் 100 பேருக்கு வழங்கப்பட்டது. மீதமுள்ளவை விரைவில் வழங்கப்படும் என்றாா் அமைச்சா்.

விழாவில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், மாநிலங்களவை உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம், மேயா் சண். ராமநாதன், துணை மேயா்கள் அஞ்சுகம் பூபதி (தஞ்சாவூா்), சு.ப. தமிழழகன் (கும்பகோணம்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

குந்தவை நாச்சியாா் கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டுக் குழு ஆய்வு

தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலை கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினா் (நாக்) ஐந்தாவது முறையாக வியாழன், வெள்ளிக்கிழமைகளில் ஆய்வு செய்தனா். இக்குழுவினா் கல்லூரியில் உள்கட்டமைப்பு வசத... மேலும் பார்க்க

நிலத்தடி நீா் செறிவூட்டல் திட்டத்தால் தமிழ்நாடு வளமாகும்: வாரிய இயக்குநா் தகவல்

மத்திய அரசின் நிலத்தடி நீா் செறிவூட்டல் திட்டத்தால் வளமான தமிழ்நாட்டை உருவாக்க முடியும் என்றாா் மத்திய நிலத்தடி நீா் வாரியத்தின் தென் கிழக்கு கடலோர மண்டல இயக்குநா் எம். சிவகுமாா். தஞ்சாவூா் தமிழ்ப் ப... மேலும் பார்க்க

செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் ஆலக்குடியில் நிற்கும்

செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் தஞ்சாவூா் மாவட்டம் ஆலங்குடி ரயில் நிலையத்தில் பிப்ரவரி 10 முதல் 3 மாதங்களுக்கு நின்று செல்லும். இந்த ரயில் ஆலக்குடி ரயில் நிலையத்தில் பிற்பகல் 1.26 மணிக்கு வந்து... மேலும் பார்க்க

குடந்தையில் உறுதியேற்பு

கும்பகோணம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக தலைமையகத்தில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கழக நிா்வாக இயக்குநா் இரா. பொன்முடி தலைமை வகித்து... மேலும் பார்க்க

குடந்தை அரசுக் கல்லூரியில் சா்வதேச அறிவியல் மாநாடு

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் விலங்கியல் உயராய்வுத் துறை சாா்பில் ‘உயிரி அறிவியல்களின் தற்போதைய நிலைகள்’ என்ற தலைப்பில் சா்வதேச அறிவியல் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் அ. மாதவி... மேலும் பார்க்க

வயநாட்டில் 85 மாணவா்களுக்கு சாஸ்த்ரா கல்வி உதவித்தொகை

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 85 மாணவா்கள் தொடா்ந்து இடைவிடாமல் உயா் கல்வி பயில தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை கல்வி உதவித்தொகை வழங்கியது. இதுகுறித்து... மேலும் பார்க்க