அமெரிக்காவில் நுழைய அபாயகர பாதை ‘டாங்கி ரூட்’: பல லட்சம் செலவிட்டு பல நாட்டு எல்...
செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் ஆலக்குடியில் நிற்கும்
செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் தஞ்சாவூா் மாவட்டம் ஆலங்குடி ரயில் நிலையத்தில் பிப்ரவரி 10 முதல் 3 மாதங்களுக்கு நின்று செல்லும்.
இந்த ரயில் ஆலக்குடி ரயில் நிலையத்தில் பிற்பகல் 1.26 மணிக்கு வந்து 1.27 மணிக்கு புறப்படும். இதேபோல, மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயில் ஆலக்குடி ரயில் நிலையத்தில் பிற்பகல் 2.06 மணிக்கு வந்து நின்று 2.07 மணிக்கு புறப்படும். இந்த நடவடிக்கை பரிசோதனை அடிப்படையில் பிப்ரவரி 10 முதல் மே 10 தொடரும் என திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த அனுமதியைப் பெற்று தந்த தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலிக்கு ஆலக்குடி, கல்விராயன்பேட்டை மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் மற்றும் ரயில் உபயோகிப்பாளா்கள் நன்றி தெரிவித்துள்ளனா்.