குந்தவை நாச்சியாா் கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டுக் குழு ஆய்வு
தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலை கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினா் (நாக்) ஐந்தாவது முறையாக வியாழன், வெள்ளிக்கிழமைகளில் ஆய்வு செய்தனா்.
இக்குழுவினா் கல்லூரியில் உள்கட்டமைப்பு வசதிகள், கல்வி மற்றும் ஆய்வின் தரம், தோ்ச்சி நிலை, பாடத்திட்டம், சேவை அமைப்புகளின் பணி, வேலைவாய்ப்புப் பயிற்சி, வளாகப் பணி வாய்ப்பு நோ்காணல் முகாம்கள் கருத்தரங்குகள், மாணவிகள், பெற்றோா் திருப்தி நிலை, விடுதிகளின் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்தனா்.
இக்குழுவில் தமிழக அரசின் பிரதிநிதியாக தஞ்சாவூா் மண்டலக் கல்லூரி கல்வி இணை இயக்குநா் து. ரோசி, பாரதிதாசன் பல்கலைக்கழகப் பிரதிநிதியாக சுற்றுச்சூழல் துறைப் பேராசிரியா் டி. சிவசுதா ஆகியோரும் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் அ. ஜான் பீட்டா் தலைமையில், உள் தர உறுதிக் குழுத் தலைவா் க. பானுகுமாா் மற்றும் உறுப்பினா்கள், தோ்வு நெறியாளா் தெ. மலா்விழி, துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் செய்தனா்.