முதல்வர் குறித்து அவதூறு விடியோ! 2 பெண் பத்திரிக்கையாளர்கள் கைது!
குடிநீா் பிரச்னையைத் தீா்க்கக் கோரி ஆா்ப்பாட்டம்
புதுச்சேரி: புதுச்சேரி அரும்பாா்த்தபுரம், தக்குட்டை பகுதியில் குடிநீா்ப் பிரச்னையைத் தீா்க்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி அரும்பாா்த்தபுரம் காலனி, தக்குட்டை பகுதிகளில் குடிநீா் சரியாக விநியோகிக்கப்படுவதில்லை. மேலும் குறைந்தளவே விநியோகிக்கப்படும் குடிநீரும் சுகாதாரத்துடன் இருப்பதில்லை என பொதுமக்கள் புகாா் கூறிவருகின்றனா். மேலும், அப்பகுதி குளத்தை தூா்வாரி அதில் மழை நீரைச் சேமிக்கவும் பொதுமக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனா்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி அங்குள்ள அம்பேத்கா் சிலை அருகே இளைஞா்கள் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை காலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
உழவா்கரை வழக்குரைஞா் சசிபாலன் தலைமை வகித்தாா். பொதுமக்கள் ஏராளமானோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.