செய்திகள் :

குடிபோதை: காசு கேட்டு தகராறு; அக்கா மகனை அடித்து கொன்ற இளைஞர்.. போதை தெளிந்ததும் தூக்கிட்டு மரணம்

post image

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கீழவடகரை அழகர்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை மனைவி ஆனந்தி. இவர்களுக்கு நிசாந்த் என்ற 14 வயது மகனும், 8 வயதில் ஒரு மகள் 3 ஆம் வகுப்பு படித்துவந்தார்.

நிஷாந்த் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் செல்லத்துரை இறந்துவிட்டார். இதையடுத்து ஆனந்தி கூலி வேலைக்கு சென்று பிள்ளைகளை வளர்த்து வந்தார். வறுமையான குடும்பச்சூழல் காரணமாக மகளை உசிலம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி படிக்க வைத்து வருகிறார்.

பாண்டீஸ்வரன்

ஆனந்தி வீட்டில் அவருடைய உடன்பிறந்த தம்பி பாண்டீஸ்வரன்(33) சேர்ந்து வசித்து வந்தார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. மதுபோதைக்கு அடிமையான ஆனந்தி வீட்டில் அவருடைய உடன்பிறந்த தம்பி பாண்டீஸ்வரன் அடிக்கடி அக்காவிடம் பணம் கேட்டு தகராறு செய்துவந்தார்.

இந்நிலையில் இரு நாள்களுக்கு முன் நள்ளிரவில் அக்கா ஆனந்தியை எழுப்பி மதுகுடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனந்தி பணம் இல்லை எனக் கூறியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பாண்டீஸ்வரன் இரும்பு கம்பியால் ஆனந்தியின் தலையில் கடுமையாக தாக்கியதில் மயங்கினார்.

தூங்கி கொண்டிருந்த நிஷாந்த் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது அம்மா தாக்கப்பட்டு கிடந்ததால், மாமாவிடம் சண்டை போட்டுள்ளார். ஏற்கெனவே மதுபோதையில் இருந்த பாண்டீஸ்வரன், நிஷாந்த்தையும் இரும்பு கம்பியால் தாக்கினார். தலையில் அடிபட்டதில் அதிக ரத்தம் வெளியேறி நிகழ்விடத்திலேயே நிஷாந்த் உயிரிழந்தார்.

சிறிது நேரத்தில் மதுபோதை தெளிந்த பாண்டீஸ்வரன் தான் செய்த தவறை உணர்ந்து, அக்காவின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நிஷாந்த்

அருகே இருந்தவர்கள் கொடுத்த தகவலின்பேரில் பெரியகுளம் போலீஸார் நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆனந்தியை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பாண்டீஸ்வரன், நிசாந்த் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடிபோதையால் அக்கா மகனையே அடித்து கொலை செய்த சம்பவம் பெரியகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

அமெரிக்க பெண் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை - திருச்சி இன்ஜினீயர் சிக்கிய பின்னணி!

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் கொடுத்த புகாரில், இந்திய குடிமகன் ஒருவர், அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை இணையதளத்தில் பின்தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தத... மேலும் பார்க்க

சென்னை: தனியாக இருந்த நர்ஸிடம் அத்துமீறல்; பைக்கை வைத்து குற்றவாளியைப் பிடித்த போலீஸ்; என்ன நடந்தது?

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்ஸாக பணியாற்றுபவர்கள் அதே பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி வருகிறார்கள்.ஷிப்ட் அடிப்படையில் நர்ஸ்க... மேலும் பார்க்க

கோவை பெண் மீது தாக்குதல்; தமாகா முன்னாள் கவுன்சிலர் மீது வழக்கு; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

கோவை உருமாண்டம்பாளையம் அருகே உள்ளசாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரம்யா. இவர் தன் வீட்டிலேயே வடகம் தயாரித்து கடைகளுக்கு வியாபாரம் செய்து வருகிறார். அந்தப் பகுதியில் தற்போது பாதாள சாக்கடை அமைக்கும் ப... மேலும் பார்க்க

சென்னை: கலெக்டரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.11 லட்சம் மோசடி; வருவாய் ஆய்வாளர்கள் சிக்கியது எப்படி?

சென்னை கலெக்டரின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கை ஆய்வு செய்த தணிக்கை குழுவினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மூன்று காசோலைகள் மூலம் 11 லட்சத்து 63 ஆயிரத்து 539 ரூபாய் மோசடியாக எடுக்கப்பட்டிருந்தைத் தணிக்க... மேலும் பார்க்க

ஶ்ரீவில்லிபுத்தூர்: நாய்கள் மூலம் மான் வேட்டையாடிய 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை பகுதியில் வேட்டை நாய்கள் மூலம் மான் வேட்டையில் ஈடுபட்ட 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம... மேலும் பார்க்க

ரூ.4.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.52,250 - ரெய்டில் சிக்கிய புதுச்சேரி `கோ ஃபிரீ சைக்கிள்’

அயல் நாடுகள் மற்றும் அயல் மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் பயணிகள், இ-பைக், ஆட்டோ, ரிக்‌ஷா, வாடகை இருசக்கர வாகனங்கள் போன்றவற்றின் மூலம் சுற்றுலாத்தலங்களை பார்வையிட்டு வருகின்றனர். அத... மேலும் பார்க்க