செய்திகள் :

குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள்: தீர்ப்பு ஒத்திவைப்பு!

post image

மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு விதித்த தீர்ப்பு மீது, குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவைகளில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்தது.

இவ்வாறு நீதித்துறை உத்தரவிட முடியுமா? என விளக்கம் கேட்டு 14 கேள்விகள் அடங்கிய குறிப்பினை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்க்கு அனுப்பினார். இதன் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூா்ய காந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்ஹா, அதுல் எஸ். சந்துா்கா் ஆகியோா் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த அமர்வு அனுப்பிய நோட்டீஸின்படி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மத்திய அரசு ஆகியவை அவற்றின் பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தன.

அவை தொடர்பான விவாதம் ஒன்பதாவது நாளாக புதன்கிழமை நடைபெற்றது, தொடர்ந்து இந்த வழக்கு இன்றைய(செப். 11) நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, கடந்த ஆக. 19 முதல் விசாரிக்கத் தொடங்கி, 10 நாள்களாக நடைபெற்று, இன்றுடன் விசாரணை நிறைவடைந்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நவ. 23 ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளதால், அதற்குள் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நடைபெற்ற கடைசி நாள் விசாரணையின் போது நீதிபதி கவாய் அதனைக் குறிப்பிட்டுப் பேசினார்.

இதையும் படிக்க: ஜிஎஸ்டி வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை!

The verdict in the case regarding the 14 questions raised by the President on the ruling setting a deadline for deciding on the bills has been postponed indefinitely.

வாகன விற்பனை நிலையங்களில் பிரதமர் மோடி படம்? காங்கிரஸ் விமர்சனம்!

கார்களின் விலைக் குறைப்புப் பட்டியலில் பிரதமரின் படம் வைக்குமாறு மத்திய அமைச்சகம் வலியுறுத்துவதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.ஜிஎஸ்டி வரிக் குறைப்புக்கும் அதற்கு முன்னதாக இருந்த விலையின் பட்டியலை சுவரொ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 8 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில், 8 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரின் கரியாபந்து மாவட்டத்தில், சிறப்பு அதிரடிப் படை மற்றும் சி.ஆர்.பி.எஃப். கோப்ரா பட... மேலும் பார்க்க

உத்தரகண்ட் பேரிடருக்கு ரூ.1,200 கோடி நிவாரணம்! பிரதமர் மோடி அறிவிப்பு!

உத்தரகண்ட் மாநிலத்துக்கு, பேரிடர் பாதிப்புகளைச் சரிசெய்ய நிவாரண நிதியாக ரூ.1,200 கோடி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். உத்தரகண்டில் பருவமழையின் தீவிரத்தால், மேகவெடிப்பு, கனமழை... மேலும் பார்க்க

மணிப்பூர்: பிரதமர் வருகையின்போது பாஜக நிர்வாகிகள் 43 பேர் ராஜிநாமா ஏன்?

மணிப்பூரில் 40-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் ராஜிநாமா செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, இந்த வார இறுதியில் மணிப்பூர் செல்லவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், மணிப்பூரில... மேலும் பார்க்க

சாலைகளைச் சீரமைக்கும் வரை சுங்கக் கட்டண வசூல் இல்லை! - தடையை நீட்டித்த கேரள உயர்நீதிமன்றம்

தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கும் வரை பளியக்கரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என சுங்கக் கட்டண வசூல் தடையை செப். 15 வரை நீட்டித்துள்ளது கேரள உயர்நீதிமன்றம். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்த... மேலும் பார்க்க

ரேபரேலியில் மாவட்ட வளர்ச்சி கூட்டம்: ராகுல் காந்தி தலைமை தாங்கினார்!

காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ராகுல் காந்தி தனது நாடாளுமன்றத் தொகு... மேலும் பார்க்க