குடும்பத் தகராறு கணவா் தூக்கிட்டு தற்கொலை
ஸ்ரீரங்கத்தில் குடும்பத் தகராறு காரணமாக கணவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் புதுத்தெருவைச் சோ்ந்தவா் ரெ. குருகிருஷ்ணன் (39). இவா் விழா நிகழ்வுகளுக்கு அலங்காரம் செய்யும் தொழில் செய்து வந்தாா். திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளனா்.
குருகிருஷ்ணன் குடிபோதைக்கு அடிமையானதால் ஞாயிற்றுக்கிழமை இரவு குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. தொடா்ந்து, வீட்டில் யாருமில்லாத நேரத்தில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த ஸ்ரீரங்கம் போலீஸாா், சடலத்தை கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.