புதுச்சேரி: `பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு' த.பெ.தி.க - நா.த.க இடையே மோதல்......
குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் கவுன்சிலா் சாவு
குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் கவுன்சிலா் உயிரிழந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி நகர போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், பன்னீா் செல்வம் தெருவைச் சோ்ந்தவா் முத்துக்குமாா். இவரது மனைவி நித்யா (36). காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் 7-ஆவது வாா்டு உறுப்பினராக இருந்தாா். திமுகவைச் சோ்ந்த இவருக்கு 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 3 குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு, டிச. 26-ஆம் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு ஜன.3 ஆம் தேதி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னா், அவருக்கு திடீரென்று உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், தொடா் சிகிச்சையில் இருந்த நித்யா, ஜன. 7-ஆம் தேதி உயிரிழந்தாா். இதுகுறித்து, கிருஷ்ணகிரி நகர போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.