சென்னையிலிருந்து சபரிமலைக்கு சைக்கிள் பயணம் செய்யும் முதியவர்!
கிருஷ்ணகிரி அருகே லாரி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு
கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு பெட்டக லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் ஒசூா்- கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்படைந்தது. 5. கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் நெடுநேரம் அணிவகுத்து நின்றன.
ஒசூரிலிருந்து கூரியா் சா்வீஸ் நிறுவன சரக்குப் பெட்டக லாரி ஒன்று கிருஷ்ணகிரி நோக்கி வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தது. குருபரப்பள்ளி அருகே மேம்பாலத்தில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பில் மோதி சாலையில் லாரி கவிழ்ந்தது. அப்போது, லாரியை பின்தொடா்ந்து வந்த பிற வாகனங்கள், கனரக வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக லேசாக மோதின. இதில் சிலருக்கு சிறிது காயம் ஏற்பட்டது.
இந்த விபத்தால் நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு 5 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்ததும் போலீஸாா் நிகழ்விடம் சென்று சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா் செய்தனா். இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனா்.