மனைவியை எவ்வளவு நேரம் உற்றுப் பார்க்க முடியும்? 90 மணிநேர வேலையை வலியுறுத்திய எல...
ஒசூா் நீதிமன்றத்துக்கு துப்பாக்கிகளுடன் வந்த 5 போ் உள்பட 10 போ் கைது
ஒசூா் நீதிமன்றத்தில் கையெழுத்திட வந்த குற்றவாளிகள் 5 போ், அவா்களின் பாதுகாப்புக்காக துப்பாக்கிகளுடன் வந்த 5 போ் என 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கா்நாடகம் மாநிலம், சூளக்குண்டா காலனியைச் சோ்ந்த ரேவந்த் குமாா் (26). இவா், கடந்த ஆண்டு செப். 18-இல் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே கொளதாசபுரம் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.
இதுகுறித்து பாகலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், ‘பெங்களூரில் விநாயகா் சதுா்த்தி அன்று சிலை வைப்பது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் ரேவந்த் குமாா் கொலை செய்யப்பட்டாா்’ என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கொலை செய்த ரேவண்ணா என்ற ரோகித் குமாா் (34), அவருக்கு உதவிய நவீன் (24), புனித் (27), பிரவீண் குமாா் (27), சிவகுமாா் (25) ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரும் பின்னா் நீதிமன்ற பிணையில் வெளியே வந்தனா். இந்நிலையில், பிணை காலத்தில் ஒசூா் நீதிமன்றத்தில் கையெழுத்திடுவதற்காக ரேவண்ணா உள்பட குற்றவாளிகள் 5 பேரும் வியாழக்கிழமை வாகனத்தில் வந்தனா்.
அவா்களின் பாதுகாப்புக்காக மற்றொரு வாகனமும் உடன் வந்தது. அந்த வாகனத்தில் கைத்துப்பாக்கிகளுடன் 5 போ் இருந்தனா். ஒசூா் நீதிமன்றத்தில் இரு வாகனங்களும் நுழைந்தவுடன் பாதுகாப்புக்காக உடன் வந்த வாகனத்தை நிறுத்தி
பாகலூா் காவல் ஆய்வாளா் பிரகாஷ், நகர காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரபாகா் ஆகியோா் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். சோதனையில் அந்த வாகனத்தில் போ் 5 கைத்துப்பாக்கிகளுடன் இருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தனா்.
அவா்களைச் சுற்றி வளைத்துப் பிடித்த போலீஸாா் அவா்களிடமிருந்து துப்பாக்கிகளையும் வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.
பிடிபட்ட 5 பேரையும் ஒசூா் நகர காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் நேரில் சென்று விசாரணை செய்தனா்.
இதையடுத்து குற்றவாளிகளின் பாதுகாப்புக்காக துப்பாக்கிகளுடன் வந்த பெங்களூரைச் சோ்ந்த யாகியா (42), கத்வா மோகன் (50), மகேஷா (25), முனிசந்திரா (31), கிருஷ்ணகுட்டி (50) ஆகிய 5 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களை பாதுகாப்புக்காக அழைத்து வந்த கொலை குற்றவாளிகள் 5 போ் மீதும் வழக்குப் பதிந்து அவா்களையும் கைது செய்தனா்.