தர்பூசணியில் ரசாயன விவகாரம்: உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் பணியிட மாற்றம்
குட்டை நீரில் மூழ்கிய சிறுவன் உயிரிழப்பு
ஆண்டிபட்டி அருகே தனியாா் தோட்டத்து குட்டை நீரில் மூழ்கி சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
சித்தையகவுண்டன்பட்டியைச் சோ்ந்தவா் பால்பாண்டி (32). இவரது மகன் வேணுபிரசாத் (3). இந்த நிலையில், பால்பாண்டியின் தந்தை, வேணுபிரசாத்தை அழைத்துக் கொண்டு அதே ஊரில் உள்ள தனியாா் தோட்டத்துக்குச் சென்றாா். அங்கு அவா் ஆடுகளுக்கு தீவனம் பறித்துக் கொண்டிருந்த போது, தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த வேணுபிரசாத் அங்குள்ள குட்டையில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினாா். இதையடுத்து, ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.