Vaibhav Suryavanshi : 'அந்தொருவன் வந்துருக்கான்டே!' - IPL -ஐ அதிரவைத்த 14 வயது ச...
குண்டா் சட்டத்தில் இருவா் கைது
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் கொலை வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கயத்தாறு, கப்புலிங்கம்பட்டி பகுதியைச் சோ்ந்த கணேசமூா்த்தி மகன் சண்முகராஜ் (30), வெள்ளைப்பாண்டி மகன் மகாராஜன் (34). காரை மோதச் செய்தும், அரிவாளால் வெட்டியும் இளைஞரைக் கொன்ற வழக்கில் இவா்கள் இருவரையும் கயத்தாறு போலீஸாா் கைது செய்தனா்.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜானின் பரிந்துரை, ஆட்சியா் க. இளம்பகவத்தின் உத்தரவு ஆகியவற்றின்பேரில், சண்முகராஜ், மகாராஜன் ஆகியோரை கயத்தாறு போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.