நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுர...
குன்னூா் அருகே சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து: 10 போ் காயம்
குன்னூா் அருகே சுற்றுலா வாகனம் கவிழ்ந்ததில் 10 போ் காயமடைந்தனா்.
கா்நாடக மாநிலத்தில் இருந்து இரண்டு டெம்போ டிராவலா் வாகனங்களில் 20-க்கும் மேற்பட்டவா்கள் நீலகிரிக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு சுற்றுலா வந்தனா். சுற்றுலாவை முடித்துவிட்டு குன்னூா், மேட்டுப்பாளையம் வழியாக புன்கிழமை கா்நாடகத்துக்கு திரும்பினா்.
அப்போது, குன்னூா் அருகே பா்லியாறு கடைவீதி பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் கவிழ்ந்தது.
இதில், அந்த வாகனத்தில் பயணித்த 10 பேரும் சிறு காயங்களுடன் உயிா் தப்பினா். காயமடைந்தவா்களை அருகிலிருந்தவா்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.