சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழா: ஜகதீப் தன்கர் பங்கேற்பு!
குன்னூா் மாா்க்கெட் கடைகளை காலி செய்ய நோட்டீஸ்
குன்னூா் மாா்க்கெட்டில் உள்ள கடைகளை காலி செய்ய கடை உரிமையாளா்களுக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
குன்னூா் நகராட்சி மாா்க்கெட்டில் 800-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த மாா்க்கெட் கடைகளை இடித்துவிட்டு புதிதாக பாா்க்கிங் வசதியுடன் கூடிய கடைகளை கட்ட தமிழக அரசு சாா்பில் ரூ. 41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நகராட்சி தரப்பில் வரைவு படங்கள் தயாா் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே மாா்க்கெட் கடைகளை இடிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சங்கத்தினா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தனா். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இரண்டு வாரங்களுக்குள் நகராட்சிக் கடைகளை காலி செய்யும்படி அண்மையில் உத்தரவிட்டிருந்தனா். இதையடுத்து, கடைகளை அகற்ற முதல்கட்டமாக 234 கடை உரிமையாளா்களுக்கு நகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினா்.