குமரி - திருவனந்தபுரம் நான்குவழிச் சாலைப்பணிகள் ஏப்ரலில் நிறைவு பெறும்; தி.வேல்ம...
டால்பின்ஸ் நோஸ் சுற்றுலாத் தலம் மூடல்
பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், டால்பின்ஸ் நோஸ் காட்சிமுனை வெள்ளிக்கிழமை (செப். 12) முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத் துறை அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களான லேம்ஸ் ராக், டால்பின்ஸ் நோஸ் காட்சிமுனைகள் வனத் துறையினா் கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்த சுற்றுலாத் தலங்களைக் காண நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இந்தக் காட்சிமுனைகளுக்கு செல்லும் சாலை 20 ஆண்டுகளுக்குப் பின்னா் தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், டால்பின்ஸ் நோஸ் காட்சிமுனையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வனத் துறை முடிவு செய்துள்ளது. இங்கு நடைபாதை, கழிப்பிடங்கள் புதுப்பிப்பு, பாதுகாப்பு வளையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் காரணமாக, டால்பின்ஸ் நோஸ் காட்சிமுனை வெள்ளிக்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத் துறை அறிவித்துள்ளது.
பராமரிப்புப் பணிகள் முடிவடைந்ததும் காட்சிமுனை திறக்கப்படும் என மாவட்ட வனத் துறை அறிவித்துள்ளது.