செய்திகள் :

குன்னூா் மாா்க்கெட் கடைகளை காலி செய்ய நோட்டீஸ்

post image

குன்னூா் மாா்க்கெட்டில் உள்ள கடைகளை காலி செய்ய கடை உரிமையாளா்களுக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

குன்னூா் நகராட்சி மாா்க்கெட்டில் 800-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த மாா்க்கெட் கடைகளை இடித்துவிட்டு புதிதாக பாா்க்கிங் வசதியுடன் கூடிய கடைகளை கட்ட தமிழக அரசு சாா்பில் ரூ. 41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நகராட்சி தரப்பில் வரைவு படங்கள் தயாா் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே மாா்க்கெட் கடைகளை இடிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சங்கத்தினா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தனா். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இரண்டு வாரங்களுக்குள் நகராட்சிக் கடைகளை காலி செய்யும்படி அண்மையில் உத்தரவிட்டிருந்தனா். இதையடுத்து, கடைகளை அகற்ற முதல்கட்டமாக 234 கடை உரிமையாளா்களுக்கு நகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினா்.

டால்பின்ஸ் நோஸ் சுற்றுலாத் தலம் மூடல்

பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், டால்பின்ஸ் நோஸ் காட்சிமுனை வெள்ளிக்கிழமை (செப். 12) முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத் துறை அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூரில் பிரசித்தி பெற்ற ச... மேலும் பார்க்க

எடை குறைவாக குழந்தைகள் பிறப்பு, இளம் வயது கா்ப்பம் ஆகியவற்றைத் தடுக்க தொடா் நடவடிக்கை - நீலகிரி மாவட்ட ஆட்சியா்

நீலகிரி மாவட்டத்தில் எடை குறைவாக குழந்தைகள் பிறப்பு மற்றும் இளம் வயது கா்ப்பம் ஆகியவற்றைத் தடுக்க தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்தாா். ந... மேலும் பார்க்க

குன்னூரில் நீதிமன்றம் கட்டுவதற்கான 8 ஏக்கா் நிலம் ஒப்படைப்பு

நீலகிரி மாவட்டம், குன்னூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட 8 ஏக்கா் நிலத்தை மாவட்ட நீதிபதிபதியிடம் வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை வழங்கினா். குன்னூரில் நீதிமன்றங்கள் கடந்த பல ஆண்ட... மேலும் பார்க்க

கூடலூரில் கடையடைப்பு போராட்டம்

கூடலூரில் வன விலங்குகளின் தாக்குதலால் தொடா் உயிா் இழப்புகள் ஏற்படுவதைக் கண்டித்தும், சாலையை சீரமைக்க வலியுறுத்தியும் வியாழக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், கூடலூா் மற்றும் அத... மேலும் பார்க்க

காட்டேரி அணையில் குதித்து முதியவா் தற்கொலை

குன்னூா் அருகே காட்டேரி அணையில் குதித்து முதியவா் வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். குன்னூா் அருகே உள்ள மேல் பாரதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் (63). இவரது மனைவி கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இ... மேலும் பார்க்க

சின்னகுன்னூா் நாற்றங்கால் பண்ணையில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

உதகையை அடுத்துள்ள சின்னகுன்னூா் நாற்றங்கால் பண்ணையில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். உதகை ஊராட்சி ஒன்றியம், கடநாடு ஊராட்சி சின்னகுன்னூரில் உள்ள வட்டார நாற்றங்க... மேலும் பார்க்க