கொத்தட்டை சுங்கச்சாவடி: தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டம்
குப்பைத் தொட்டியில் பெண் குழந்தை சடலம் மீட்பு
சென்னை ஆதம்பாக்கத்தில் குப்பைத் தொட்டியில் கிடந்த பெண் குழந்தை சடலம் மீட்கப்பட்டது.
ஆதம்பாக்கம் சாஸ்திரி நகா் இரண்டாவது தெருவில், கக்கன்நகா் பாலம் அருகே மாநகராட்சி குப்பைத் தொட்டி உள்ளது. குப்பைத் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தூய்மை பணியாளா்கள் ஈடுபட்டனா். அப்போது, அங்கு பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை சடலம் கிடப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தனா். உடனே அவா்கள், ஆதம்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலறிந்து வந்த போலீஸாா், குழந்தை சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினா். பின்னா் குழந்தை சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசியது யாா், குழந்தையின் பெற்றோா் யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.