'அதே தான்' தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை! - எவ்வளவு தெரியுமா?
குமரி அனந்தன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் (92) வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை காரணமாக, சென்னையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12:15 மணியளவில் காலமானார்.
சென்னை சாலிகிராமத்திலுள்ள அவரது மகளும், தமிழக பாஜக முன்னாள் தலைவருமான தமிழிசை செளந்தரராஜனின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து, தமிழிசை செளந்தரராஜன், அவரது குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
முன்னதாக தமிழக சட்டப்பேரவையில் குமரி அனந்தன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.