குமரி மாவட்ட ரயில்வே பணிகளை துரிதப்படுத்தக் கோரி எம்.பி. மனு
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ரயில்வே பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று சென்னையில் தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங்கை சந்தித்து விஜய்வசந்த் எம்.பி. மனு அளித்தாா்.
அதன் விவரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில்வே துறை தொடா்பான பல்வேறு திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளின் தேவைகளை உணா்ந்து மக்களவையில் பலமுறை குரல் கொடுத்து, அமைச்சா் மற்றும் உயா் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டதன்பேரில், ரயில் நிலையங்களை மேம்படுத்துதல், புதிய ரயில்வே பாலங்கள் போன்ற திட்டங்களை கொண்டுவந்துள்ளோம். இந்தப் பணிகள் தொடங்கப்பட்ட போதிலும் மிக மந்த கதியில் நடைபெற்று வருகின்றன. எனவே, பணிகளை துரிதப்படுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.