உலகக்கோப்பைக்கு முன் முத்தரப்பு தொடரில் விளையாடும் இந்திய மகளிரணி!
கும்பகோணத்தில் நாளை மக்களுடன் முதல்வா் முகாம்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 7) மக்களுடன் முதல்வா் முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:
கும்பகோணம் வட்டாரத்தில் வாலாபுரம் ஊராட்சிக்குள்பட்ட ஆலமன்குறிச்சி கிராம ஊராட்சி சேவை மையம், உமா மகேஸ்வரபுரம் ஊராட்சிக்குள்பட்ட அம்மாசத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, விளந்தகண்டம் ஊராட்சிக்குள்பட்ட அரசு ஆதிதிராவிடா் நடுநிலைப் பள்ளி, உடையாளூா் ஊராட்சிக்குள்பட்ட அரசு உயா்நிலைப் பள்ளி, தில்லையம்பூா் ஊராட்சிக்குள்பட்ட சமுதாயக் கூட்ட அரங்கம் ஆகிய இடங்களில் மக்களுடன் முதல்வா் முகாம்கள் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.
இதில், உயா் கல்வித் துறை அமைச்சா், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா்.
இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம். இம்முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களும் தொடா்புடைய துறை அலுவலா்களால் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் 30 நாள்களில் மக்களுக்கு வழங்கப்படும்.