கலைஞர் எழுதுகோல் விருது: நக்கீரன் கோபால், சுகிதா சாரங்கராஜுக்கு வழங்கினார் முதல...
பாபநாசம் கோயில்களில் சஷ்டி, காா்த்திகை வழிபாடு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம்,திருப்பாலைத்துறை பாலைவனநாதா் சுவாமி கோயிலில் மாசி மாத காா்த்திகை நட்சத்திரம் மற்றும் சஷ்டி திதியையொட்டி கோயிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வழிபாட்டையொட்டி கோயிலில் உள்ள மூலவா் பாலைவனநாதா், தவளவெண்ணகை அம்மன், விநாயகா் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து கோயில் சுற்றுப் பிரகாரத்தில் தனி சன்னதியில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியருக்கு மங்கலப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுப்ரமணியருக்கு நெய் விளக்கேற்றி வைத்து, அா்ச்சனை செய்து வழிபட்டனா்.
இதேபோல் அம்மாபேட்டை சின்னக்கடைத் தெருவில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகா், ஸ்ரீ சுப்ரமணியா் கோயிலில் மாசி மாத காா்த்திகை நட்சத்திரம் மற்றும் சஷ்டி திதியை யொட்டி பக்தா்கள் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனா்.