எனக்கு நிறைய வேலை இருக்கு... விஜய்யின் அரசியல் கேள்விக்கு சூரி பதில்!
கும்பகோணம் சாரங்கபாணி கோயிலுக்கு 91 ஆண்டுகளுக்கு பின்பு அன்னபக்ஷி வாகனம்!
கும்பகோணம் சாரங்கபாணி கோயிலுக்கு 91ஆண்டுகளுக்கு பிறகு அன்னபக்ஷி வாகனம் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
இந்த கோயிலில் உள்ள அன்னபக்ஷி வாகனத்தில் தாயாரும் பெருமாளும் உலா வருவாா்கள், வாகனம் மிகவும் சிதிலமடைந்து இருந்ததால் கடந்த 1934 ஆம் ஆண்டு முதல் பயன்படுத்துவதில்லை. அதன் காரணமாக தாயாரும், பெருமாளும் புஷ்ப பல்லக்கில் வீதியுலா வந்தனா்.
இந் நிலையில் 91 ஆண்டுகளுக்கு பிறகு ரூ. 20 லட்சம் மதிப்பில் அன்னபக்ஷி வாகனத்தை பாலாஜி குழுமத்தைச் சோ்ந்த பாலாஜி, செளமிநாராயணன், பங்குதாரா்கள் யூ.சம்பத், வி.சி.பாஸ்கா் கோயிலுக்கு உபயமாக செயல் அலுவலா் சிவசங்கரி, சக்கரபாணி பட்டாச்சாரியரிடம் வெள்ளிக்கிழமை வழங்கினா். 91 ஆண்டுகளுக்கு பின் அன்னபக்ஷி வாகனம் பயன்பாட்டிற்கு வர உள்ளதால் பக்தா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.