ஆள் கடத்தலில் ஈடுபட்ட கிளர்ச்சியாளர்கள் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!
கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளிக்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
நீா்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல் மலை, வெள்ளக்கெவி, வட்டக்கானல், பாம்பாா்புரம் ஆகியவற்றில் கடந்த 3 நாள்களாக மழை பெய்து வருவதால், கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அருவிக்கு தண்ணீா் வரத்து அதிகரித்ததையடுத்து, வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு அருவிப் பகுதியில் அபாயச் சங்கு ஒலிக்கப்பட்டது. அப்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்தவா்களை வனத் துறையினா் வெளியேற்றினா்.
மேலும், நீா்வரத்து சீராகும் வரை இந்த அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், அங்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக தேவதானப்பட்டி வனத் துறையினா் தெரிவித்தனா்.