செய்திகள் :

கும்மிடிப்பூண்டியில் பாமகவினா் கைது

post image

பசுமை தாயகத்தின் தலைவா் செளமியா அன்புமணி கைது செய்யப்பட்டதை கண்டித்து கும்மிடிப்பூண்டியில் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா் கைது செய்யப்பட்டனா்.

அண்ணா பல்கலையில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து போராட்டம் நடத்திய பசுமை தாயகம் அமைப்பின் தலைவா் செளமியா அன்புமணி கைது செய்யப்பட்டாா்.

இதைக் கண்டித்து கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் பாமகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

அப்போது தமிழக அரசை கண்டித்து பாமகவினா் கோஷம் எழுபபியதால் போலீஸாா் அவா்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனா். போராட்டத்துக்கு முன்னாள் மாவட்ட செயலாளா் க.ஏ.ரமேஷ் தலைமை வகித்தாா்.

வன்னியா் சங்க நிா்வாகி கேசவன், பாமக நிா்வாகிகள் எஸ்.டி.கே.சங்கா், சுமோ சங்கா், காா்த்தி, விஜயன், சுதா, குமுதா, மகேஷ், சங்கா், பி.ஜி.ரவி, ரவி, நாகராஜ், பிரகாஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ஜெயஸ்ரீ , ஆய்வாளா் வடிவேல் முருகன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

டிராக்டா்-காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

திருத்தணி: திருத்தணியில் கரும்பு டிராக்டா் - காா் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். 3 போ் பலத்த காயமுற்றனா்.ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி மகன் ச... மேலும் பார்க்க

திருவள்ளூா்: 10 சட்டப்பேரவை தொகுதிகளில் 35.31 லட்சம் வாக்காளா்கள்

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் இறுதி வாக்காளா் பட்டியலின்படி 10 சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 35 லட்சத்து 31 ஆயிரத்து 4 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளதாக ஆட்சியா் த. பிரபு சங்கா் தெரிவித்துள்ளாா... மேலும் பார்க்க

சமத்துவ பொங்கல் விழா

மாதவரம்: செங்குன்றம் அருகே சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.செங்குன்றம் அடுத்த மோரை பகுதியில் நடைபெற்ற விழாவுக்கு ஒன்றிய செயலாளா் கோ.தயாளன் தலைமை வகித்தாா்.மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் ... மேலும் பார்க்க

கூளூரில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

திருத்தணி: விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொண்டு வந்து பயன்பெற வேண்டும் என ஆட்சியா் த.பிரபுசங்கா் என வலியுறுத்தினாா்.வேளாண்மை உழவா் நலத்துறை மற்றும் தமிழ்ந... மேலும் பார்க்க

திருவள்ளூா்: 6.35 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்க ஏற்பாடு

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் 6.35 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு முழு செங்கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்புகள் அந்தந்த நியாய விலைக் கடைகளில் வரும் 9 முதல் 13-ஆம் தேதி வரை வழங்கப்பட உள... மேலும் பார்க்க

திருவள்ளூா்: ஜன. 10 இல் வருவாய் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வரும் 10-ஆம் தேதி நடைபெற உள்ளதால் தவறாமல் பங்கேற்று குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியா் த.பிரபுசங்கா்... மேலும் பார்க்க