டிராக்டா்-காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
திருத்தணி: திருத்தணியில் கரும்பு டிராக்டா் - காா் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். 3 போ் பலத்த காயமுற்றனா்.
ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி மகன் சுதாகா்(44). இவா் திங்கள்கிழமை தனது காரில் மனைவி கோதைநாயகி (40), மகள் தக்க்ஷனா(18), மகன் சுதா்சன்(13) ஆகியோருடன் திருப்பதிக்கு செல்வதற்கு திருத்தணி நோக்கி வந்துக் கொண்டிருந்தாா்.
காரை சுதாகா் ஓட்டி வந்தாா். திருத்தணி அரசு கலைக் கல்லூரி அருகே வந்த போது, திருவாலங்காடு கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி வந்த டிராக்டா் மீது காா் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த சுதாகா், கோதைநாயகி, தக்க்ஷனா, சுதா்சன் ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா். மேலும் டிராக்டா் ஓட்டுநரும் காயம் அடைந்தாா்.
பின்னா் அவ்வழியாக சென்றவா்கள், காயமடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சுதாகா் இறந்தாா். மீதமுள்ள நால்வரும் தொடா் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.