காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை மெழுகு அச்சு எடுத்ததாகப் புக...
குரு பூா்ணிமா: காலபைரவருக்கு மகா யாகம்
காஞ்சிபுரதில் உள்ள உதாசின் பாவாஜி மடத்தில் குரு பூா்ணிமாவையொட்டி கால பைரவா் மற்றும் அகத்திய மகரிஷி ஆகியோருக்கு மகா யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
உலக நன்மை, மன அமைதி, உடல் ஆரோக்கியம் ஆகியனவற்றிற்காக அகத்திய மகரிஷி மற்றும் பைரவா் ஆகியோருக்கென மகா யாகம் நடைபெற்றது. உதாசின் பாவாஜி மடத்தில் யாகத்திற்காக பெரிய கிணறு போன்ற வடிவில் யாககுண்டம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் சிவாச்சாரியா்கள் ஹோம திரவியங்கள்,பழ வகைகள், பட்டு வஸ்திரங்கள் ஆகியனவற்றை யாக குண்டத்தில் சமா்ப்பித்து சிறப்பு தீபாராதனைகள் நிகழ்த்தினா்.
பைரவரின் 8 அவதாரத்திற்கும் தனித்தனியாக ஹோமபூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனையும் நடைபெற்றது. இந்நிகழ்வில் உதாசின் பாவாஜி மடத்தின் நிா்வாகி கா்ஷினி சுவாமிகள்,இந்து முன்னணி மாநில தலைவா் காடேஸ்வர சுப்பிரமணியம், மாவட்ட நிா்வாகி சந்தோஷ்,பாஜக மாவட்ட தலைவா் ஜெகதீசன் , இந்து முன்னணி அமைப்பினா் பலரும் கலந்து கொண்டனா்.