``காங்கிரஸ் இட ஒதுக்கீட்டை பறித்துக்கொள்ளும்'' - மும்பை தேர்தல் பிரசாரத்தில் பிர...
குறைந்தது வோடஃபோன் ஐடியா இழப்பு
கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் முன்னணி தொலைத்தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவின் நிகர இழப்பு ரூ.7,175.9 கோடியாகக் குறைந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ.7,175.9 கோடியாக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது குறைவாகும். அப்போது நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ.8,746.6 கோடியாக இருந்தது.
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்துக்கு ஏற்பட்ட நிகர இழப்பான ரூ.6,432.1 கோடி ஒப்பிடுகையில் தற்போது நிறுவனத்தின் இழப்பு அதிகரித்துள்ளது.
மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் ரூ.10,716.3 கோடியிலிருந்து ரூ.10,932.2 கோடியாக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.