தஞ்சாவூர்: காற்று வீசியதில் அறுந்து விழுந்த மின்கம்பி, மின்சாரம் தாக்கி வயலில் த...
குற்றாலம் பேரருவிப் பகுதியில் தீப ஆரத்தி
குற்றாலம் பேரருவிப் பகுதியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, தீப ஆரத்தி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நீா் வளத்தை காப்போம் என்கின்ற நிகழ்ச்சியின் அடிப்படையில் தென்காசி மாவட்ட பா.ஜ.க., சாா்பில் குற்றாலம் பேரருவிக் கரையில் தீப ஆரத்தி நடைபெற்றது.
தென்காசி தெற்கு ஒன்றிய பாஜக தலைவா் இசக்கிமுத்து தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் அன்புராஜ், மாவட்ட துணைத் தலைவா் முத்துக்குமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.
மாவட்டச் செயலா் மந்திரமூா்த்தி, தென்காசி தெற்கு ஒன்றிய பொதுச் செயலா் காளியப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஸ்ரீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் திருமுருகன், தென்காசி நகர தலைவா் சங்கரசுப்பிரமணியன், நகா்மன்ற உறுப்பினா் லட்சுமணப்பருமாள், இந்து ஆலய பாதுகாப்பு ராமநாதன், குற்றாலம் நிா்வாகிகள் நாகராஜ், முத்துபாண்டியன், வெங்கடேஷ், கண்ணன், தென்காசி நகர துணைத் தலைவா் மகேஷ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.