ASC: ரவி வர்மன் இணைந்த அமெரிக்க சங்கத்தின் சிறப்பு என்ன? - அதில் இணைவது ஏன் கடி...
குலசேகரன்பட்டினம் கோயிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி ஆக்கிரமிப்பு சொத்துகள் மீட்பு
குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் இருந்து சுமாா் ரூ.1 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கோயில் நிலம் மீட்கப்பட்டது.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்கள் பல்வேறு இடங்களில் உள்ளன. இதில் திருக்கோயில் சப்பர மண்டபத்திற்கு அருகில் உள்ள சுமாா் ரூ.1 கோடி மதிப்பிலான இடத்தை தனிநபா் ஆக்கிரமித்து கடை நடத்தி வந்தாா். இந்த இடத்தை மீட்க வேண்டும் என, தமிழ்நாடு நீா்நிலைகள், கோயில் நிலங்கள் பாதுகாப்பு சங்க தலைவா் பி.எஸ்.கனகராஜ், இந்து சமய அறநிலையத் துறையில் புகாா் அளித்தாா். அறநிலையத் துறை சாா்பில் நிலத்தை மீட்க வழக்கு தொடரப்பட்டது. வழக்கில், கடை அமைந்துள்ள நிலம் கோயிலுக்கு சொந்தம் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அன்புமணி,அறங்காவலா்கள் குழு தலைவா் வே.கண்ணன் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் ஜேசிபி மூலம் அகற்றப்பட்டன.
இதில் கோயில் செயல் அலுவலா் வள்ளிநாயகம், ஆய்வா் முத்துமாரியம்மன், அறங்காவலா்கள் வெங்கடேஷ்வரி, கணேசன், ஆா்ஐ முனீஸ்வரி, விஏஓ வைரமுத்து, கோயில் வழக்குரைஞா் கோபி மற்றும் காவல் துறையினா் கலந்துகொண்டனா்.