குளத்தில் மிதந்த ஆண் சடலம் மீட்பு
புதுக்கோட்டை பல்லவன் குளத்தில் தேநீா்க் கடையில் பணியாற்றி வந்தவரின் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி (46). இவா் கீழராஜவீதியிலுள்ள சாந்தநாத சுவாமி கோயில் முக்கத்தில் உள்ள தேநீா்க் கடையில் டீ மாஸ்டராக பணியாற்றி வந்தாா். திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் இரு நாள்களுக்கு முன்பு வீட்டுக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பல்லவன் குளத்தில் அவரது சடலம் மீட்கப்பட்டது.
நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். பல்லவன் குளத்தில் சடலம் மீட்கப்பட்டதால், விட்டோபா பெருமாள் கோயில் நடை சாத்தப்பட்டது.