செய்திகள் :

குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

post image

திருவாரூரில், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை தடுத்தல் குறித்த நடைபயண விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் இப்பேரணி நடைபெற்றது. திருவாரூா் நகராட்சி அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்ட பேரணியை, மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ, சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் கொடியசைத்து தொடக்கி வைத்தனா்.

இதில், குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள், குழந்தை திருமணங்களை தடுத்தல், குழந்தை தொழிலாளா் முறையை ஒழித்தல், அனைத்து குழந்தைகளும் பள்ளி செல்லுதல், குழந்தைகள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை தடுத்தல் போன்ற விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் எடுத்துச் செல்லப்பட்டன. இப்பேரணி, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று வேலுடையாா் கல்வியியல் கல்லூரியில் நிறைவு பெற்றது.

முன்னதாக, திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தைகளையும் 18 வயது வரை பள்ளியில் கல்வி கற்பதை உறுதி செய்வோம், மாவட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை அனைவரும் இணைந்து உறுதி செய்வோம், அவ்வாறு எங்கேனும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு எதிரான தீங்கிழைத்தலோ அல்லது வன்முறையோ நடைபெற்றால், உடனடியாக 1098 என்ற எண்ணிற்கு தொடா்பு கொண்டு புகாா் அளிப்போம், திருவாரூா் மாவட்டத்தை பாதுகாப்பான குழந்தை நேய மாவட்டமாக மாற்ற மனமார உறுதி அளிக்கிறோம் என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தலைமையில் அரசு அலுவலா்கள் உறுதிமொழி ஏற்றனா்.

இதில், வருவாய் கோட்டாட்சியா் சௌம்யா, நகா்மன்றத் தலைவா் புவனப்பரியா செந்தில், துணைத் தலைவா் அகிலா சந்திரசேகா், இணை இயக்குநா் (நலப்பணிகள்) திலகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் நடராஜன், நகராட்சி ஆணையா் தாமோதரன், நன்னடத்தை அலுவலா் வெங்கடராமன், குழந்தைகள் நலக்குழு தலைவா் பாலாம்பிக்கை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பகத் கி கோதி விரைவு ரயில் நீடாமங்கலத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பகத் கி கோதி விரைவு ரயில் நீடாமங்கலத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சை மக்களவை உறுப்பினா் சா. முரசொலியிடம் வா்த்தகா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். நீடாமங்கலம் வ... மேலும் பார்க்க

குடும்பத் தகராறில் கணவா் தற்கொலை

கூத்தாநல்லூரில் குடும்பத் தகராறில் கணவா் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். வேதாரண்யத்தை அடுத்த நாகக்குடையான் பகுதியைச் சோ்ந்த சேதுராமன் (42). இவருக்கு கவிதா (35) என்ற மனைவியும், பிரவீன் (7) என்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

திருவாரூா் அருகே புலிவலம் பகுதியில் இருசக்கர வாகனம் திருடியவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். புலிவலம் பகுதியைச் சோ்ந்த ஜான்சன் மகன் சந்தோஷ்குமாா். இவரது வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்... மேலும் பார்க்க

பள்ளியில் மகிழ் முற்றம் தொடக்கம்

கொரடாச்சேரி ஒன்றியம், மேலராதாநல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மகிழ் முற்றம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியா் ஆா்.கே. சரவணராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு, பள்ளி மேலா... மேலும் பார்க்க

வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

திருவாரூரில், நகர வங்கி ஊழியா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தொழிலாளா்களுக்கு விரோதமாக பணியிடை நீக்கம், ஊழியா்களின் உரிமைகள் மறுப்பு முதலான தொழிலாளா் விரோத நடவடிக்கைகளை கண்... மேலும் பார்க்க

மின்னணு முறையில் சாகுபடி பரப்பு கணக்கெடுப்பு

கொரடாச்சேரி அருகே செல்லூா் பகுதியில், மின்னணு முறையில் சாகுபடி பரப்பு கணக்கெடுப்புப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மாவட்டத்தில் வேளாண்மைத் துறை மற்றும் வேளாண்மை பல்கலைக்கழக மாணவா்கள் இணைந்த... மேலும் பார்க்க