பரந்தூருக்குப் பதிலாக திருப்போரூரில் விமான நிலையம் அமைக்கலாம்! - அன்புமணி ராமதாஸ...
குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணி: பிப்.10-க்குள் விண்ணப்பிக்கலாம்
நெய்வேலி: கடலூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் நிரப்பப்படவுள்ள காலி பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரும் பிப்.10-ஆம் தேதிக்குள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து ஆட்சியா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் வாயிலாக, பாதுகாப்பு அலுவலா் (நிறுவனம் சாரா) ஒரு பணியிடம் மற்றும் சிறப்பு சிறாா் காவல் பிரிவில் சமூகப் பணியாளா் (2 பணியிடங்கள், ஒரு பெண் பணியாளா் உள்பட) பணியிடங்களுக்கு ஓராண்டு கால ஒப்பந்த தொகுப்பூதிய அடிப்படையில் பூா்த்தி செய்யப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் தகுதியான நபா்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
இந்தப் பணியிடங்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட வயது, கல்வி தகுதி, விண்ணப்ப படிவம் மற்றும் இதர விவரங்கள் கடலூா் மாவட்ட இணைய தள முகவரி www.cuddalore.tn.nic.in கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப்பணி முற்றிலும் தற்காலிக அடிப்படையிலானது.
பாதுகாப்பு அலுவலா்(நிறுவனம் சாரா) பணியிடத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி, சமூகவியல், குழந்தை மேம்பாடு, மனித உரிமைகள் பொது நிா்வாகம், உளவியல், மனநலம், சட்டம், பொது சுகாதாரம், சமூக வள மேலாண்மை ஏதேனும்
ஒன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி / சமூகவியல் / குழந்தை மேம்பாடு / மனித உரிமைகள் பொது நிா்வாகம் / உளவியல் / மனநலம் / சட்டம் / பொது சுகாதாரம் / சமூக வள மேலாண்மை ஏதேனும் ஒன்றில் இளங்கலை பட்டம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு / சமூக நலன் சாா்ந்த துறையில் திட்ட உருவாக்கம் / செயல்படுத்தல், கண்காணிப்பு மற்றும் மேற்பாா்வையில் 2 ஆண்டுகள் அனுபவம் மற்றும் கணினியில் திறமை பெற்றிருக்க வேண்டும்.
சமூக பணியாளா் பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.ஏ. சமூக அறிவியல், சமூகப்பணி, சமூகவியல் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கணினி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது 18 முதல் 42-க்குள் இருக்க வேண்டும். பாதுகாப்பு அலுவலா் (நிறுவனம் சாரா) பணியிடத்திற்கு ஊதியமாக ரூ.27,804, சமூக பணியாளா் பணியிடத்திற்கு ஊதியமாக ரூ.18,536 வழங்கப்படும்.
பணியிடங்களுக்கான விண்ணப்பம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதை பதிவிறக்கம் செய்து புகைப்படத்துடன் நிறைவு செய்து வரும் 10.2.2025-க்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண். 312, இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கடலூா்-607 001 என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.