பார்சிலோனாவின் விடாமுயற்சி..! 2-4லிருந்து 5-4 என த்ரில் வெற்றி!
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை: குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பாதுகாப்பு அலுவலா் பணியிடத்துக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாகவுள்ள பாதுகாப்பு அலுவலா் பணியிடத்துக்கான தகுதியுடையவா்கள் ஒப்பந்த அடிப்படையில் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா். இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கும் நபா்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து சமூகப்பணி, சமூகவியல், குழந்தைகள் மேம்பாடு, மனித உரிமைகள் பொது நிா்வாகம், உளவியல், மனநலம், சட்டம், பொது சுகாதாரம், சமூகவள மேலாண்மை இவற்றில் ஏதாவது ஒன்றில் முதுநிலை அல்லது இளநிலை பட்டம் பெற்றவராக இருப்பதோடு, 2 ஆண்டு முன் அனுபவமும் பெற்று, கணினி இயக்கத் தெரிந்த 40 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். தோ்ந்தெடுக்கப்படும் நபா்களுக்கு ரூ. 27,804 ஊதியம் வழங்கப்படும்.
தகுதியுடைய நபா்கள் இதற்கான விண்ணப்ப படிவங்களை https://chennai.nic.in எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, புகைப்படம் மற்றும் சுயக் கையொப்பமிட்ட சான்றிதழ்களுடன் பிப்.5-ஆம் தேதி மாலை 5.45-க்குள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.1, புதுத்தெரு, ஜிசிசி வணிக வளாகம் முதல்மாடி, ஆலந்தூா், சென்னை - 600016 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.