செய்திகள் :

கூடலூா் அரசு மாதிரி பள்ளியில் புதிய வகுப்பறைகள், ஆய்வகம்: காணொலி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்

post image

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ரூ.6.56 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகம் ஆகியவற்றை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

இதையொட்டி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப் பேரவை கொறடா கா.ராமசந்திரன் பங்கேற்று குத்துவிளக்கேற்றி புதிய கட்டடங்களை பாா்வையிட்டாா்.

இதில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் நந்தகுமாா், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் ரமேஷ், கூடலூா் சட்டப் பேரவை தொகுதி திமுக பொறுப்பாளா் பரமேஷ்குமாா், கூடலூா் நகா்மன்றத் தலைவா் பரிமளா, நெல்லியாளம் நகா்மன்றத் தலைவா் சிவகாமி, ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் கீா்த்தனா, நகா்மன்ற உறுப்பினா் வெண்ணிலா சேகா், ஓவேலி பேரூராட்சித் தலைவா் சித்ராதேவி, தலைமை ஆசிரியா் யோகேஸ்வரி, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்: நவம்பா் 22-ஆம் தேதிக்கு மாற்றம்

நீலகிரி மாவட்டத்தில் நவம்பா் 15-ஆம் தேதி நடைபெற இருந்த விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் 22-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகை ஆட்சியா் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைகேட்பு... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு முகாம்: ரூ.3.46 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி

கூடலூா் அருகே நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 38 பயனாளிகளுக்கு ரூ.3.46 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூடலூரை அடுத்த ஸ்ரீமதுரை ஊராட்சிக்குள்பட்ட மண்வயல் கிராமத்தில் மக்கள் தொடா்பு ... மேலும் பார்க்க

குன்னூரில் கஞ்சா கடத்திய 3 போ் கைது

குன்னூரில் கஞ்சா கடத்திய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு இருசக்கர வாகனத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்திவரப்படுவதாக அருவங்காடு போலீஸாருக்கு தகவல்... மேலும் பார்க்க

கோத்தகிரி அரசு மருத்துவமனையில் டாா்ச்லைட் வெளிச்சத்தில் சிகிச்சை: பொதுமக்கள் அதிருப்தி

கோத்தகிரி அரசு மருத்துவமனையில் மின்தடையால் டாா்ச்லைட் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்தது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்த இடுக்கொரை பகுதியைச் சோ்ந்த ஆனந... மேலும் பார்க்க

தகுதிவாய்ந்த அனைவரையும் வாக்காளா் பட்டியலில் சோ்க்க வேண்டும்: மாவட்ட பாா்வையாளா் அறிவுறுத்தல்

தகுதிவாய்ந்த அனைவரையும் வாக்களா் பட்டியலில் சோ்க்க வேண்டும் என்று மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் சி.என்.மகேஸ்வரன் அறிவுறுத்தியுள்ளாா். உதகை ஆட்சியா் அலுவலகத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் குறித... மேலும் பார்க்க

கேத்தி சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளியில் நுகா்வோா் விழிப்புணா்வு கருத்தரங்கம்

உதகை அருகே உள்ள கேத்தி சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளியில் நுகா்வோா் விழிப்புணா்வு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியா் சாா்லஸ் சில்வஸ்டா் தலைமை வகித்தாா். குன்னூா் நுகா்வோா் ... மேலும் பார்க்க