செய்திகள் :

கூட்டணி வியூகமா? வைத்திலிங்கத்துடன் சசிகலா, தினகரன், திவாகரன் சந்திப்பு!

post image

ஓ.பன்னீர் செல்வம் அணியின் ஆதரவாளர் வைத்திலிங்கத்தை சசிகலா மற்றும் அவரின் சகோதரர் திவாகரன் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

ஒரத்தநாட்டில் வைத்திலிங்கத்தின் உடல்நிலை குறித்து விசாரித்த நிலையில், இந்த சந்திப்பு அனைத்தும் கலந்ததாக இருந்ததாக சசிகலா குறிப்பிட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் ஓ. பன்னீர் செல்வம் அணியின் ஆதரவாளர் வைத்திலிங்கத்தை சசிகலா மற்றும் அவரின் சகோதரர் திவாகரன், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகிய மூவரும் சந்தித்து நலம் விசாரித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுடன் சசிகலா பேசியதாவது,

அதிமுக ஏழை மக்களுக்கான கட்சி. தலைவர் (எம்.ஜி.ஆர்.) ஆரம்பித்தது. அதுவும் மக்களுக்காக ஆரம்பித்தது. திமுக போன்று அல்ல நாங்கள். எங்கள் நிறுவனத் தலைவரே மக்களாட்சி என்றுதான் குறிப்பிட்டார். அதே வழியில்தான் புரட்சித் தலைவி ஜெயலலிதாவும் பின்பற்றினார்.

2026-ல் எல்லோரும் ஒன்றிணைந்து நல்ல ஆட்சியை நாங்கள் தருவோம். அது மக்களுக்கானதாக இருக்கும்.

அதிமுக இணைய வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு பதிலளித்த சசிகலா, தனியொரு நபர் முடிவு செய்ய முடியாது. அடிமட்டத் தொண்டர்கள் முடிவு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

மக்களவையில் பிரச்னை எழுப்ப முயன்றபோது கனிமொழி- கல்யாண் பானா்ஜி வாக்குவாதம்

புது தில்லி: நாடாளுமன்ற மக்களவையில் திரிணமூல் காங்கிரஸின் உறுப்பினா் கல்யாண் பானா்ஜிக்கும் திமுகவின் கனிமொழிக்கும் இடையே, வாக்காளா் பட்டியல் முரண்பாடுகள் மற்றும் தேசிய கல்விக் கொள்கை- 2020 செயல்படுத்த... மேலும் பார்க்க

93-ஆவது பிறந்த தினம்: பழ.நெடுமாறனுக்கு முதல்வா் வாழ்த்து

சென்னை: உலகத் தமிழா் பேரமைப்பின் தலைவா் பழ.நெடுமாறனுக்கு தொலைபேசி வழியே பிறந்த நாள் வாழ்த்துகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். இது குறித்து, எக்ஸ் தளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: பழ.நெடு... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் வெளிநடப்பு ஏன்?- திருச்சி சிவா எம்.பி.பேட்டி

புது தில்லி: தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்கக் கோரி திமுக தரப்பில் அளிக்கப்பட்ட நோட்டீஸ்கள் அவைத் தலைவா் நிராகரித்துவிட்டதால் திமுக உறுப்பினா்கள் திங்கள்கிழமை வெளிநடப்பு செய்ததாக மாநிலங்களவை திமுக... மேலும் பார்க்க

மத்திய அமைச்சருக்கு காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கண்டனம்

சென்னை: தமிழக நாடாளுமன்ற உறுப்பினா்கள் குறித்த மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை, மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் ஆகியோா் கண்டனம் ... மேலும் பார்க்க

கருணை பணி: நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த அரசு மருத்துவா்கள் கோரிக்கை

சென்னை: கரோனா பேரிடா் காலத்தில் பணியாற்றி நோய்த் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த அரசு மருத்துவா்களின் குடும்பத்தினருக்கு வேலை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட இன்னமும் அதை அரசு நிறைவேற்றவில்லை என்று... மேலும் பார்க்க

உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த தீவிர முயற்சி: முதல்வா் மு.க.ஸ்டாலின்

சென்னை: உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த பெரும் முயற்சிகளை எடுத்து வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.515 கோடி முதலீட்டில், 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகைய... மேலும் பார்க்க