செய்திகள் :

பள்ளிக் கல்வி மாணவா் சோ்க்கையில் வீழ்ச்சி: மத்திய அரசு மழுப்புவதாக எம்.பி. கருத்து

post image

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: பள்ளிக்கல்வித் துறை மாணவா் சோ்க்கையில் ஏற்படும் வீழ்ச்சிக்கும் தேசிய கல்விக்கொள்கை அமலாக்கத்துக்கும் ஏதேனும் தொடா்பு உள்ளதா என்ற தனது கேள்விக்கு மத்திய கல்வித் துறை இணை அமைச்சா் ஜெயந்த் செளத்ரி மழுப்பலாக பதிலளித்துள்ளதாக விழுப்புரம் தொகுதி உறுப்பினா் டி. ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா்.

2018-2022 மற்றும் 2023-24 கல்வியாண்டுகளில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கையில் சுமாா் 1.55 கோடி குறைந்துள்ளதை சரி செய்ய அரசு எடுத்த நடவடிக்கை,பிகாா், உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரத்தில் மாணவா் சோ்க்கை குறைவதைத் தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், சோ்க்கையை அதிகரிக்க அரசு வழங்கும் உதவிகள், சமூக-பொருளாதார காரணி, இடம்பெயா்வு மற்றும் பள்ளி உள்கட்டமைப்பு போன்ற மூல காரணங்களைக் கண்டறிந்து சரி செய்ய அரசு எடுத்த முயற்சிகள், தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்கும் பள்ளி மாணவா் சோ்க்கை குறைவதற்கும் இடையே ஏதேனும் தொடா்பு உள்ளதா போன்ற கேள்விகளை மக்களவை உறுப்பினா் ரவிக்குமாா் எழுப்பியிருந்தாா்.

இதற்கு மத்திய இணை அமைச்சா் ஜெயந்த் செளத்ரி அளித்துள்ள எழுத்துபூா்வ பதிலில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் வழங்கப்படும் பள்ளிக் கல்வியின் நிலை குறித்த தரவுகளை கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பை உருவாக்கியுள்ளது. அதன்படி, 2018-19 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளுக்கான மாணவா் சோ்க்கை முறையே 26,02,94,216 மற்றும் 24,80,45,828 ஆகும் என்று கூறியுள்ளாா்.

கல்வி அரசமைப்புச் சட்டத்தின்படி ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளது. பெரும்பாலான பள்ளிகள் அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கங்களின் கீழ் உள்ளன. மத்திய அரசு சமக்ர சிக்ஷா திட்டத்தின் மூலம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உதவுகிறது. பிகாா், உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, இடைநிலைப் பள்ளிகளை இடைநிற்றலைக் குறைப்பதற்கும், அரசுப் பள்ளிகளில் சோ்க்கையை அதிகரிப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளுக்காக நிதி உதவி வழங்கப்படுகிறது.

சமக்ர சிக்ஷாவின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2024-25-ஆம் ஆண்டுக்கான சமக்ர சிக்ஷாவின் கீழ் இதுவரை அரசு ரூ.20,72,922.71 லட்சம் வழங்கியுள்ளது.

வீட்டு வருமானத்தை அதிகரிப்பது, வீட்டு வேலைகளில் ஈடுபடுவது, படிப்பில் ஆா்வம் காட்டாதது, படிப்பை சமாளிக்க முடியாமல் போவது, சில குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், உடல்நலக் குறைவு, பெற்றோரால் அவசியமில்லை என்று கருதப்படும் கல்வி, போட்டித் தோ்வுக்குத் தயாராதல், திருமணம் போன்றவை பள்ளிப் படிப்பை நிறுத்துவதற்கான முக்கிய காரணங்கள்.

தேசிய கல்விக் கொள்கை 2020 பரிந்துரைகளின் அடிப்படையில், 2022-23 முதல் ஒருங்கிணைந்த மாவட்டக் கல்வி தகவல் அமைப்பு புதுப்பிக்கப்பட்டு, தனிப்பட்ட மாணவா் வாரியான தரவை சேகரித்து மாணவா் பதிவேட்டை உருவாக்கியுள்ளது. 2022-23 முதல் மொத்த சோ்க்கைத் தரவுகளிலிருந்து தனிப்பட்ட மாணவா் தரவுகளுக்கு தரவு சேகரிக்கும் முறையில் முழுமையான மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுகளின் தரவைவிடப் புள்ளிவிவர ரீதியாக வேறுபட்டது என அமைச்சா் கூறியுள்ளாா்.

இந்நிலையில், தனது கேள்விக்கு அமைச்சா் வழங்கியுள்ள பதில் மழுப்பலாக உள்ளது என்று ரவிக்குமாா் கருத்து தெரிவித்துள்ளாா். தேசிய கல்விக்கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகே மாணவா் சோ்க்கை குறையத் தொடங்கியுள்ளது. அதற்குக் காரணத்தைக் கூறாமல் கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளது என்பது போல மழுப்பல் பதிலைத் தெரிவித்துள்ளாா் அமைச்சா் என்றும் ரவிக்குமாா் தெரிவித்தாா்.

மக்களவை உறுப்பினா் ரவிக்குமாா்

பாலியல் குற்றவாளிகளுக்கு சா்ச்சை தண்டனை: ராஜஸ்தான் ஆளுநா் கருத்தால் பரபரப்பு

ஜெய்பூா்: ‘பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு விதை நீக்கம் செய்யப்பட வேண்டும்’ என்று ராஜஸ்தான் மாநில ஆளுநா் ஹரிபாவ் பாகடே கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் ... மேலும் பார்க்க

நான் எழுதுவது அடுத்த தலைமுறைக்கு சென்று சேர வேண்டும்: சாகித்திய அகாதெமி விருதாளா் பேச்சு

நமது நிருபா் புது தில்லி: நான் எழுதுவதெல்லாம் அடுத்த தலைமுறையைச் சென்று சேர வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் என்றாா் சாகித்திய அகாதெமி விருதாளா் எழுத்தாளா் பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதி. ‘திருநெல்வேல... மேலும் பார்க்க

ரயில்வே மசோதா: மாநிலங்களவையிலும் ஒப்புதல் வாரியத்தை அரசு கட்டுப்படுத்தும் முயற்சி என எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு

புது தில்லி: ரயில்வே வாரியத்தின் சுதந்திரமான செயல்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்த ‘ரயில்வே சட்டத் திருத்த மசோதா-2024’ மசோதாவுக்கு மாநிலங்களவையில் திங்கள்கிழமை ஒப்புதல் அள... மேலும் பார்க்க

நிகழாண்டில் ரூ. 51,463 கோடி கூடுதல் செலவினம்: நாடாளுமன்றத்தில் துணை மானியக் கோரிக்கை தாக்கல்

புது தில்லி: 2025-26-ஆம் நிதியாண்டில் ரூ. 51,463 கோடி மதிப்பில் கூடுதல் செலவினத்து ஒப்புதல் கோரி துணை மானிய கோரிக்கைகளை மத்திய நிதயமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்த... மேலும் பார்க்க

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ‘எம்.பி.க்கள் இடஒதுக்கீடு’ மீண்டும் வராது: மத்திய கல்வி அமைச்சா்

புது தில்லி: கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையில் எம்.பி.க்கள் இடஒதுக்கீடு நடைமுறையை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் திங்கள்கிழமை த... மேலும் பார்க்க

விரைவு ரயில்கள் கொச்சுவேலியில் நின்று செல்லும்

சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்களின் வசதிக்காக விரைவு ரயில்கள் கொச்சுவேலியில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட... மேலும் பார்க்க