கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாய் கசிவால் வீணாகும் குடிநீா்
திருப்பத்தூா் அருகேயுள்ள சிறுகூடல்பட்டி சமத்துவபுரம் பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீா் குழாய் கசிவால் குடிநீா் வீணாகி வருகிறது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரிலிருந்து காரைக்குடி சாலை வழியாக சிறுகூடல்பட்டி சமத்துவபுரம் பகுதியில், அமைக்கப்பட்டுள்ள காவிரி கூட்டுக்குடிநீா் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த சில நாள்களாக தண்ணீா் வழிந்தோடி வீணாகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.