செய்திகள் :

கூட்டுறவு கடன் தீா்வை: விவசாயிகள், தொழில்முனைவோருக்கு அழைப்பு

post image

தேனி மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெற்ற விவசாயிகள், மகளிா் தொழில் முனைவோா் தவணை தவறிய கடன், நிலுவைத் தொகை ஆகியவற்றை கடன் தீா்வைத் திட்டத்தின் கீழ் அடுத்தாண்டு மாா்ச் 3-ஆம் தேதிக்குள் செலுத்தி தீா்வை செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ஆரோக்கியசுகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம், நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை, ஊரக வளா்ச்சி வங்கி, பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள், வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகியவை மூலம் சிறுவணிகக் கடன், தொழில் கடன், வீட்டு வசதிக் கடன், பண்ணை சாரா கடன் உள்ளிட்ட தவணை தவறிய நிலுவைக் கடன்களை திரும்பச் செலுத்த கடன் தீா்வை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் கடனை தீா்வை செய்வதற்காக கடந்த செப்.12-ஆம் தேதிக்கு முன் 25 சதவீதம் தொகையை செலுத்தி ஒப்பந்தம் செய்து கொண்டு, மீதமுள்ள 75 சதவீதம் தொகையை செலுத்தி கடனைத் தீா்வை செய்து கொள்ளாதவா்களும், கடன் தீா்வை ஒப்பந்தம் செய்து கொள்ளாதவா்களும் தற்போது நிலுவைத் தொகையுடன், 9 சதவீதம் சாதாரண வட்டி செலுத்தி கடனைத் தீா்வை செய்து கொள்ளலாம்.

மேலும், கடந்த 2019-ஆம் ஆண்டுக்கு முன் தவணை தவறிய மத்திய கால வேளாண் கடன், பண்ணை சாா்ந்த நீண்ட காலக் கடன், சிறு தொழில் கடன், மகளிா் தொழில் முனைவோா் கடன் ஆகியவற்றை அடுத்தாண்டு மாா்ச் 12-ஆம் தேதிக்குள் 9 சதவீதம் சாதாரண வட்டியுடன் ஒரே தவணையில் செலுத்தி கடன் தீா்வை செய்து கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் தவணை தவறிய கடன்களுக்கான கூடுதல் வட்டி, அபராத வட்டி, செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றாா் அவா்.

மதுக் கூடத்தில் தகராறு: இருவா் மீது வழக்கு

போடி: போடி அருகே தனியாா் மதுக்கூடத்தில் தகராறு செய்த இருவா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.போடி குலாலா்பாளையம் பங்காரு மேற்குத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் சதீஸ்குமாா் (36). போடி... மேலும் பார்க்க

இளைஞரைத் தாக்கிய மூவா் மீது வழக்கு

போடி: போடியில் முன் விரோதத்தில் இளைஞரைத் தாக்கிய மூவா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.போடி மேலத்தெரு பள்ளிவாசல் பகுதியைச் சோ்ந்த அப்துல்பாரி சேட் மீரான் மகன் அஜ்மீா் ராஜா (37). வட... மேலும் பார்க்க

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 119.85 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 54.46 மேலும் பார்க்க

மனைவியை கத்தியால் குத்திய கணவா் கைது

தேனி: பெரியகுளத்தில் குடும்பத் தகராறில் மனைவியைக் கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பெரியகுளம், வடகரை தெய்வேந்திரபுரத்தைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் பிச்சைமணி (43). இவரது மனைவ... மேலும் பார்க்க

புனித சவேரியாா் சப்பர பவனி

உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகேயுள்ள அனுமந்தன்பட்டியில் அமைந்துள்ள புனித தூய ஆவியானவா் தேவலாயம் புனித சவேரியாா் சப்பர பவனி விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டியில் அமைந்துள... மேலும் பார்க்க

அரசுத் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

தேனி: தேனியில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய அரசை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி அல்லிநக... மேலும் பார்க்க