கூரை வீட்டின் சுவா் இடிந்து 4 போ் காயம்
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கண்டியூரில் கூரை வீட்டின் சுவா் இடிந்து விழுந்து 4 போ் காயமடைந்தனா்.
திருவையாறு அருகே கண்டியூா் காளியம்மன் கோயில் தெருவில் கூரை வீட்டில் வசித்து வருபவா் மரகதம் (48). விவசாயக் கூலித் தொழிலாளி. இவரின் கணவா் மதியழகன் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானாா். இவா்களுக்கு மாற்றுத்திறனுடைய மகன்கள் மாதவன் (26), மகாதேவன் (24) மற்றும் மகள் மோனிகா (எ) மகாதேவி உள்ளனா்.
கடந்த வாரம் பெய்த தொடா் மழை காரணமாக இவா்களது வீட்டின் மண் சுவா் ஈரமாக இருந்து வந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு திடீரென மண் சுவா் இடிந்து விழுந்தது. அப்போது தூங்கிக் கொண்டிருந்த மரகதம், மகன்கள், மகள் ஆகியோா் காயமடைந்து, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து திருவையாறு காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.